Sony வழங்கும் ‘ஆதரவு’ பயன்பாடு, தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளுடன் கூடிய எளிதான சுய உதவித் தீர்வை வழங்குகிறது. அதில் தயாரிப்பு சார்ந்த ஆதரவுடன் பகுப்பாய்வுத் திறன்களும் உள்ளன. அதில் தொடுதிரை, கேமரா அல்லது ஒளி சென்சார் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்காக உங்கள் சாதனத்தைப் பழுதுநீக்கலாம். உங்கள் சாதனத்திலுள்ள மென்பொருள் பதிப்பு, நினைவக அளவு, பயன்பாட்டுச் சிக்கல்கள் மற்றும் பல விரைவுத் தகவல்களைப் பெறலாம். எங்கள் உதவிக் கட்டுரைகளைப் படிக்கலாம், எங்கள் ஆதரவு மன்றத்தில் தீர்வுகளைக் கண்டறியலாம், உங்களுக்குத் தேவைப்பட்டால், எங்கள் உதவி நிபுணர்களைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் சாதன மாதிரி அல்லது OS பதிப்பைப் பொறுத்து, இந்தப் பயன்பாடு அல்லது அம்சங்கள் ஆதரிக்கப்படாமல் போகலாம். கூடுதலாக, ஒரே தொடருக்குள் கூட, மொபைல் கேரியரைப் பொறுத்து ஆதரவு மாறுபடலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
16 செப்., 2025